அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பற்சிகிச்சைக்காக பயன்படுத்திய கருவிகள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத காரணத்தால் சுமார் 1800 பேர் வரை எச்.ஐ.வி கிருமியினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
மங்களூர் விமான விபத்தில்
0
A.R. Rahman Jai ho Concert: Sydney Festival
மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்
6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா
A.R. Rahman Jai ho Concert: Sydney Festival )
Rahman Jai ho Concert: Sydney Festival January 2010 ( Videos)....read more
மடி கணனியின் அடுத்த அவதாரம் 'டேப்ளட்
பார்ப்பதற்கு ஸ்லேட் போன்றே இருப்பதால் இதை ஸ்லேட் என்று அழைத்தாலும் தவறு இல்லை.read more
குறைந்தது 6-மணி நேரங்கள் நித்திரை செய்கிறீர்களா,இல்லை என்றால் இதை வாசியுங்கள்
Quisque sed orci ut lacus viverra interdum ornare sed est. Donec porta, erat eu pretium luctus, leo augue sodales....read more
Friday, July 2, 2010
அமெரிக்காவில் பற்சிகிச்சையின் போது 1800 பேருக்கு எச்.ஐ.வி கிருமி தொற்று
அமெரிக்காவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பற்சிகிச்சைக்காக பயன்படுத்திய கருவிகள் சரியான முறையில் சுத்தம் செய்யப்படாத காரணத்தால் சுமார் 1800 பேர் வரை எச்.ஐ.வி கிருமியினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.
Labels:
உலகம்; America,
மருத்துவம்
Saturday, June 19, 2010
ஒரேயொரு மூளையுடன் வாழும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
உலகில் ஒட்டிப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள் எல்லோரையும் விட இவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் பொதுவாக இருக்கின்றது.
ஒரேயொரு மூளையுடைய ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் இந்த உலகத்திலேயே இவர்கள் மாத்திரம்தான். ரரிஅனா-கிரிஸ்ரா இருவரும் கனடாவில் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு தற்போது மூன்று வயது.இருவருக்கும் ஒரேயொரு மூளை மாத்திரம் இருப்பதால் ஒருவரிடம் இருந்து மற்றவரை அறுவைச் சிகிச்சை மூலம் பிரிக்கின்றமை சாத்தியம் அல்ல என்று வைத்தியர்கள் திட்டவட்டமாகக் கூறி விட்டனர். இவர்களுக்கு வேறு யாரிடமும் காணவே முடியாத தனித்துவமான சிறப்புத் தன்மைகள் பல இருக்கின்றன என்று பெற்றோர் கூறுகின்றனர்.
குறிப்பாக ரரிஅனாவின் கண்களால் கிரிஸ்ராவும், கிரிஸ்ராவின் கண்களால் ரரிஅனாவும் காட்சிகளைக் காண முடிகின்றது என்று அவர்கள் தெரிவித்தனர்.சாதாரணமாக ஒட்டிப் பிறந்த ஏனைய இரட்டைக் குழந்தைகளால் செய்ய முடியாத இவ்வாறான பல செயல்களை இந்த இருவரும் செய்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் மருத்துவ உலகம் இவர்களைப் பார்த்து அதிசயிக்கின்றது.
உலகத்தின் மாறுபட்ட அபிப்பிராயங்களையும் தாண்டி இவர்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாகவே உள்ளனர். இவர்களால் நன்றாகவே நடந்து திரிய முடிகிறது.இவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் உண்டு. உதரணமாக எந்தப் பாதையால் நடக்கலாம்?, என்ன செய்து கொள்ளலாம்? போன்ற விடயங்களில் இவர்களுக்குத் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகள் எழுந்துவிடத்தான் செய்கின்றன
Labels:
அதிசயம்,
உலகநிகழ்வுகள்.,
உலகம்
Sunday, June 13, 2010
சுனாமி எச்சரிக்கை – கரையோரங்களில் மக்கள் பதற்றம்
இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமுத்திரத்தில் இடம்பெற்ற 7.7 பூமி அதிர்ச்சியை தொடர்ந்து இலங்கை பூராவும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி ஊடாக இவ்விடயம் வளிமண்டலவியல் திணைக்களத்தை ஆதாரம் காட்டி இலங்கை நேரம் 2 மணியளவில் வெளியிடப்பட்டதுடன், 2.40 அளவில் இன்னும் ஒரு மணி நேரத்துக்கு அபாய நிலைஇருப்பதாகவும் க்ரையோரப்பிரதேசங்களில் வாழும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு என்று வலி மண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளதாகவும் கேட்கப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திரத்தில் அந்தமான்,நிகோபார் தீவுகளில் சற்று முன்னர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கைக் கோபுரத்தின் ஊடாக எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அறிவித்தலும் விடுக்கப்பட்டதை அடுத்து கரையோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் பதற்றமடைந்திருப்பதுடன், கடலுக்கு அண்மையிலுள்ள மக்கள் உட்பகுதிகளை நோக்கி நகரத்தொடங்கியுள்ளனர்.
பொலீஸார் பாதுகாப்பு அறிவிப்புக்களை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
மக்கள் வீதிகளில் குழுமியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நேரம் பசுபிக் சுனாமி அவதானிப்பு நிலையமும் இப்பாரிய நிலநடுக்கமானது சுனாமியை ஏற்படுத்தும் என வெளியிட்டுள்ளது.
இச்சுனாமியானது இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, மியன்மார், தாய்லாந்து, மலேசியா ஆகிய நாடுகளில் ஏற்படலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது, இந்தியா நிகோபர் தீவுக்கு அண்மையில் இன்று இந்திய நேரப்படி இரவு 7:27 க்கு , 7.7 வடக்காகவும், 91.8 கிழக்காகவும் ஏற்பட்டதாகவும், 7.6 மக்னிரியூட் அளவில் அமைந்ததாகவும் இதனால் சுனாமி அறிகுறி மிகவும் காணப்படுவதாகவும், மேற்குறிப்பிட்ட நாடுகளின் கரையோரப்பகுதி மக்களை அவதானமாகவும் இருக்குமாறு அவதானிப்பு நிலையங்கள் கேட்டுக்கொள்கின்றன.
இவ்வேளையில் கொழும்பில் கடற்கரையை அண்டிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடிக்கட்டடங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கத்தினை உணர்ந்த மக்கள், கட்டிடங்களை விட்டு வீதியில் நின்றதாக கொழும்பு பகுதி மக்கள் தெரிவித்த போதிலும், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மக்கள் வெளியேறத்தேவை இல்லையென்றும் கூறப்படுகின்றது.
Labels:
tsunami,
இந்தியா,
உலகநிகழ்வுகள்.
Tuesday, June 8, 2010
அமெ. ஓகியோவில் (ohio )சூறாவளி : 7 பேர் பலி, பலர் காயம்
அமெரிக்க ஓகியோ Ohio மாகாணத்தில் நேற்று சூறாவளி புயல் தாக்கியதில் வட மேற்கு ஓகியோவில் 50 வீடுகள் இடிந்தன. சூறாவளியின் போது கடுமையான இடியும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். லேக்டவுன் ஷிப்பில் பள்ளி கட்டிடம் இடிந்தது. வீதிகளில் ஓடிய பஸ்கள் மற்றும் கார்கள் தூக்கி வீசப்பட்டன.
மிசிசிகன் நகரில் உள்ள அணு உலை மூடப்பட்டது. சூறாவளி புயலில் சிக்கி 7 பேர் பலியானார்கள் ,
மேலும் சில போடோஸ்
Labels:
உலகநிகழ்வுகள்.,
உலகம்; America
Monday, June 7, 2010
டைட்டானிக் பயணத்தை முழுமையாக்கும் “டைட்டானிக் 2′
இங்கிலாந்திலிருந்து, 1912ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, பயணத்தை துவங்கிய, டைட்டானிக் சுற்றுலா கப்பல், ஏப்ரல் 15ம் தேதி, அட்லாண்டிக் சமுத்திரத்தில், பயணித்தபோது, பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.
இந்த பயங்கர விபத்தில் சுற்றுலா பயணிகள், ஊழியர்கள் என, மொத்தம் 2,223 பேரில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,578 பேர், கடலில் மூழ்கி பலியாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீதமிருந்தோர், கடும் முயற்சிக்கு பின் மீட்கப்பட்டனர்.
டைட்டானிக் சுற்றுலா கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம், உலக வரலாற்றில், கருப்பு தினமாக கருதப்படுகிறது.
டைட்டானிக் கப்பல் மூழ்கி, 2012ம் ஆண்டுடன், நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்நினைவு தினத்தையொட்டி டைட்டானிக் பயணம் செய்த, அதே பாதையில், டைட்டானிக் நினைவு சுற்றுலா கப்பலை, (டைட்டானிக் 2) இயக்க, பிரிட்டனை சேர்ந்த, பிரபல மைல்மார்கன் சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இக்கப்பல், 2012ம் ஆண்டு, ஏப்ரல் 8ம் தேதி, சவுத்ஆம்டன் நகரில், தனது பயணத்தை துவக்கவுள்ளது.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய தினமான, ஏப்ரல் 15ம் தேதி அன்று, அதே இடத்தில், நினைவு சுற்றுலா கப்பல் நிலை நிறுத்தப் படுகிறது. இரவு 2.20 மணிக்கு, நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின், பயணத்தை தொடரும் கப்பல், ஏப்ரல் 20ம் தேதி, நியூயார்க் நகரை சென்றடையும்.
டைட்டானிக் கப்பலில், பயணம் செய்த போது, உயிரிழந்தவர்களின, குடும்ப உறுப்பினர்கள் பலர்,விபத்து குறித்தும், இறந்தவர்களின் அனுபவங்கள் குறித்தும், விளக்குவர். கப்பலில் பயணம் செய்வதற்கான, முன்பதிவு துவங்கியுள்ளது.
Thursday, June 3, 2010
மைக்கல் ஜக்சனின் குழந்தைகளுக்கு தலா 33 மில். டொலர் சொத்து
மறைந்த பிரபல பொப் இசைப் பாடகர் மைக்கல் ஜக்சன் தனது குழந்தைகள் 3 பேருக்கும் தலா 33 மில்லியன் டொலர் சொத்து எழுதி வைத்துள்ளார்.
மைக்கல் ஜக்சன், தன் குழந்தைகள் பெயரில் நிதியம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த நிதியத்தின் மூலம் வசூலாகும் தொகை முழுவதையும் தனது குழந்தைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
அவரது குழந்தைகள் பிரின்ஸ்,பாரீஸ், பிளாங்கெட் ஆகிய மூவருக்கும் 30 வயதாகும் முன்னரே, அவர்களுக்கான பணம் கிடைத்துவிடும் வகையில் உயில் எழுதப்பட்டுள்ளது. மைக்கல் ஜக்சன் குடும்ப நிதியம், குழந்தைகளை வந்தடைய வேண்டும் என 2002ஆம் ஆண்டு அவரே கையெழுத்திட்டு உயில் எழுதியுள்ளார்.
தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 33 மில்லியன் டொலர் சொத்து உள்ளது. ஜக்சன் தனது தாய் கேத்தரினுக்கு 99 மில்லியன் டொலர்களை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் தனது தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் முன்னாள் மனைவி ஆகியோருக்கு எவ்வித சொத்தும் எழுதி வைக்கவில்லை.
மைக்கல் தனது தந்தை மற்றும் சகோதரர்களிடம் மிகுந்த பற்றுதலாக இருப்பார் எனவும், ஆனால் ஏன் அவர்களுக்குச் சொத்து எதுவும் எழுதி வைக்கவில்லை என்பது புதிராகவே இருக்கின்றது எனவும் அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜக்சனின் 23 பக்க உயில் பத்திரம், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜக்சனின் வழக்கறிஞர்கள், அவரது எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களைப் பணமாக மாற்றி ஜக்சனின் கணக்கில் வைத்துள்ளனர். ஜக்சனின் படம், இசை மற்றும் பிற சொத்துக்களின் மதிப்பு 300 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. _
Reade more >>
மைக்கல் ஜக்சன், தன் குழந்தைகள் பெயரில் நிதியம் ஒன்றை அமைத்துள்ளார். இந்த நிதியத்தின் மூலம் வசூலாகும் தொகை முழுவதையும் தனது குழந்தைகள் பெயரில் எழுதி வைத்துள்ளார்.
அவரது குழந்தைகள் பிரின்ஸ்,பாரீஸ், பிளாங்கெட் ஆகிய மூவருக்கும் 30 வயதாகும் முன்னரே, அவர்களுக்கான பணம் கிடைத்துவிடும் வகையில் உயில் எழுதப்பட்டுள்ளது. மைக்கல் ஜக்சன் குடும்ப நிதியம், குழந்தைகளை வந்தடைய வேண்டும் என 2002ஆம் ஆண்டு அவரே கையெழுத்திட்டு உயில் எழுதியுள்ளார்.
தற்போது ஒவ்வொரு குழந்தைக்கும் தலா 33 மில்லியன் டொலர் சொத்து உள்ளது. ஜக்சன் தனது தாய் கேத்தரினுக்கு 99 மில்லியன் டொலர்களை எழுதி வைத்துள்ளார். ஆனால் அவர் தனது தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் முன்னாள் மனைவி ஆகியோருக்கு எவ்வித சொத்தும் எழுதி வைக்கவில்லை.
மைக்கல் தனது தந்தை மற்றும் சகோதரர்களிடம் மிகுந்த பற்றுதலாக இருப்பார் எனவும், ஆனால் ஏன் அவர்களுக்குச் சொத்து எதுவும் எழுதி வைக்கவில்லை என்பது புதிராகவே இருக்கின்றது எனவும் அவரது குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜக்சனின் 23 பக்க உயில் பத்திரம், தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜக்சனின் வழக்கறிஞர்கள், அவரது எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்களைப் பணமாக மாற்றி ஜக்சனின் கணக்கில் வைத்துள்ளனர். ஜக்சனின் படம், இசை மற்றும் பிற சொத்துக்களின் மதிப்பு 300 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. _
Labels:
micheljackson,
உலகம்
Wednesday, June 2, 2010
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை
ஒன்றுக்கு மேறப்பட்ட மொழிகளை அறிந்திருப்பது மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும் என பான்குர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இரண்டு வயது முதல் 80 வயது வரையிலான 700 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
பல மொழிகளில் பேசுவதற்கும், பல கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் மொழியறிவு மிகவும் இன்றியயைமாததென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பல மொழிகளை தெரிந்து கொள்வதனால் நேரடியாக கிடைக்கப் பெறக் கூடிய நன்மைகளைப் போன்றே மறைமுகாக உடலுக்கு வேறும் நன்மைகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளை வயதடைவதனை கடடுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு மொழிகளில் பேசுதல், எழுதுதல் மற்றும் சிந்தித்தல் ஆகியவற்றினால் மூளையின் செயற்திறன் வலுப்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மொழிச் செயற்பாடுகள் மூளையின் சிக்கல் மிகுந்த இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இரண்டு வேறுபட்ட மொழிக் கட்டமைப்புக்களை மூளை ஆயுள் முழுவதும் செயற்படுத்துவதனால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Labels:
கண்டுபிடிப்பு,
மருத்துவம்
Wednesday, May 26, 2010
பெண்களை விடவும் ஆண்களே அதிகளவு பொய் பேசுவதாக அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது
மூவாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவில் ஆண் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று பொய்களை கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, வருடமொன்றுக்கு பிரித்தானிய ஆண் ஒருவர் சராசரியாக 1092 பொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், பெண்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு பொய்களையே பேசுவதாகவும், இதன்படி வருடமொன்றுக்கு 728 பொய்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகமான நபர்கள் தங்களுடைய தாயிடமே பொய் பேசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணையிடம் ஆண்கள் தங்களது குடிப்பழக்கம் அல்லது மதுபானம் அருந்திய அளவு தொடர்பிலான பொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது
Labels:
கண்டுபிடிப்பு
மனிதர்களின் சிந்தனைத் திறனைக் குறைக்கும் தகவல் தொழில் நுட்பம்
அசுர வளர்ச்சியடைந்துவரும் தகவல் தொடர்பு சாதனங்கள் மனிதனின் சிந்தனைத் திறனைக்குறைப்பதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இன்றைய நிலையில் அதிகமான தகவல்களை மூளைக்குள் திணிப்பதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. எங்கும், எதிலும் கணினி மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விடயங்களைத் தெரிந்து கொள்கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் என பல ஊடகங்கள் மூலம் தினமும் ஒரு லட்சம் வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர். கடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயிரத்து 845 டிரில்லியனாக உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில், கணினி, தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல் களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப்படுகிறது. இது, ஒரு வாரத்தில் மடிக்கணினியினுள் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர். சாண்டியாகோ பல்கலைக் கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,"அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது' என்கிறார். "பரபரப்பாக கணினிகளை இயக் கவும், செல்பேசிகளில் பேசவும், தொலைக்காட்சி பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்' என்று மனநோய் மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார். "கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன் படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய கலங்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்' என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் கொலின் பிளக்மோர் கூறுகிறார்.
Labels:
கண்டுபிடிப்பு,
மருத்துவம்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உட்கொள்வதனால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக நவீன மருத்து ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
சொசேஜஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளினால் அதிகளவு இருதய நோய் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எவ்வாறெனினும், பச்சை இறைச்சி வகைகளினால் அதிகளவு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.ஹாவார்ட் பல்கலைக்கழக மருத்துவ ஆய்வாளர்ளினால் ஒரு மில்லியன் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாள் தோறும் 50 கிராம் அளவு பதப்படுத்திய இறைச்சியை உணவில் சேர்த்துக்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோயும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பதப்படுத்தப்படாத பச்சை இறைச்சி வகைகளான மாடு, ஆடு, பன்றி போன்ற இறைச்சி வகைகளை உட்கொள்வோருக்கு நீரிழிவு நோய் ஏற்படக் கூடிய அபாயம் குறைவாகவே காணப்படுகின்றது. இரண்டு இறைச்சி வகைகளிலும் ஒரேயளவு கொழும்பு சத்தே காணப்படுவதாகத் தெரவிக்கப்படுகின்றது.
Labels:
கண்டுபிடிப்பு,
நிகழ்வுகள்.
உலகின் முதல் 'செயற்கை உயிரி' என்று வருணிக்கப்படுகின்ற ஒரு பாக்டீரியாவை விஞ்ஞானிகள் படைத்துள்ளனர்.
கணினி ஒன்றைப் பயன்படுத்தி வெறுமனே நான்கு இரசாயனங்களைச் சேர்த்து கட்டமைக்கப்பட்ட டி.என்.ஏ.வால் கட்டுப்படுத்தப்படக்கூடிய ஒற்றை உயிர்க்கல உயிரி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். "இந்த பாக்டீரியாவின் மரபணுப் பாரம்பரியம் என்பது ஒரு கணினிதான். ஆகவே, செயற்கையாகப் படைக்கப்பட்ட முதல் உயிர் வடிவம் என்றால் அது நிச்சயம் இதுதான்." என்கிறார் இந்த செயற்கை உயிரியைப் படைத்திருக்கின்ற ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர் கிரெய்க் வெண்டர்.அதாவது ஒரு பாக்டீரியாவுக்கான மரபணுக் கட்டமைப்பை கணினி மென்பொருள் துணையுடன் வடிவமைத்து செயற்கையாக இரசாயனங்களைக் கலந்து உருவாக்கி அதனை ஒரு உயிரணுக்குள் செலுத்தி விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். விஞ்ஞானி கிரெய்க் வெண்டர் அவ்வாறு செயற்கை மரபணுக் கட்டமைப்பு செலுத்தப்பட்டவுடன் அந்த உயிரிகள், அந்த செயற்கை மரபணுக் கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் செயல்பட ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் மேரிலாண்ட் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களிலிருந்து செயல்படும் ஜே.சி.வி.ஐ. என்ற ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கை உயிரியை உருவாக்கியுள்ளனர். தி சயின்ஸ் என்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கண்டுபிடிப்பு, அறிவியல் முன்னேற்றத்தில் ஒரு மாபெரும் முன்னேற்றம் என்று வருணிக்கப்படுகிறது. மருந்தாக செயல்படக்கூடிய, எரிபொருளாக செயல்படக்கூடிய, காற்று மண்டலத்திலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சி காற்றை சுத்தப்படுத்தக்கூடிய வகைகளில் எல்லாம் செயற்கை பேக்டீரியாக்களை உருவாக்கி நாம் பலன் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதேநேரம் செயற்கை உயிரினங்களால் உலகத்துக்கு பெரிய ஆபத்துகளும் வரலாம் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இயற்கையில் காணப்படும் இந்த பேக்டீரியாவிலிருந்து இந்த செயற்கை பாக்டீரியாவை வேறுபடுத்திக் காட்டுவதற்காக செயற்கை பாக்டீரியாவின் மரபணுக் கட்டமைப்பில் அதனை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்கள், அவர்களின் இணையதள முகவரி போன்றவையும் அதிலே சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு செயற்கையாக உயிரிகளைப் படைப்பது தார்மீக அடிப்படையில் சரியா, தவறா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பையோஎன்ஜினியரிங் என்று சொல்லப்படும் இந்த உயிரியல் தொழில்நுட்பத்தால் ஒரு புதிய தொழில்துறைக்கான கதவுகள் திறந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பயனுள்ள எரிபொருட்களையும் புதிய தடுப்பு மருந்துகளையும் உருவாக்கக்கூடிய பணி செய்யும் செயற்கை பாக்டீரியாக்களுக்கான மரபணுக் கட்டமைப்பை வடிவமைப்பது தொடர்பில் இந்த ஆராய்ச்சி நிறுவனம் ஏற்கனவே மருந்து உறுபத்தி நிறுவனங்களுடனும் எரிபொருள் எடுக்கும் நிறுவனங்களுடனும் சேர்ந்துப் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த செயற்கை உயிரிகளின் பலன்கள் மிகவும் மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Labels:
உலகநிகழ்வுகள்.,
கண்டுபிடிப்பு
Tuesday, May 25, 2010
அதிக வேலை மூளையை பாதிப்பு
இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு.
வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர்.
நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!
Labels:
மருத்துவம்












![[PrtScr+capture_6.jpg]](http://2.bp.blogspot.com/_5FblaEIZXOM/S136vI36cgI/AAAAAAAABgo/ip7Dv6OCkEE/s1600/PrtScr%2Bcapture_6.jpg)









